வுனியா கொம்புவைத்தகுளம் படுகொலை -13 ஏப்ரல் 2006


வுனியா மாவட்டத்தின் வடக்கே உள்ள பெரியமடு காட்டுப்பகுதிக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள் மூவர் நான்கு வேட்டை நாய்களுடன் வேட்டைக்குச் சென்றனர். அவ்வாறு வேட்டைக்குச் சென்ற இவர்கள் வீடு திரும்பி வராததினால் உறவினர்கள் தேடியும் அவர்களின் நிலை பற்றி அறியமுடியாததினால் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும் தமிழீழ விடுதலைப்புலிகளிடமும் அவர்கள் தொடர்பான விடயங்களை அறிந்து தருமாறு முறைப்பாட்டினைச் செய்தனர். இவ்வாறு இவர்கள் காணாமல்போன ஐந்து நாட்களின் பின்னர் வவுனியா கொம்புவைத்தகுளம் காட்டுப்பகுதியினுள் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களது!முகங்கள் அசிற் ஊற்றப்பட்ட நிலையில் கருகிக் கிடந்தன. அத்துடன் ஒருவரது முகத்தில் ஆழமான வெட்டுக்காயமும் காணப்பட்டது. இவர்களை சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரே செய்திருக்கக்கூடும் என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்தனர். இவர்கள் காணமால் போன மறுநாள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கறுப்புடை அணிந்த 05 படையினர் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி சென்றதை அக்கிராம மக்கள் கண்டதாகவும் கூறப்படுகின்றது.

 

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்

01.தியாகராசா குகனேஸ்வரன் 36 பனிக்கநீராவி, பெரியமடு, புளியங்குளம்

02.சிவசம்பு நகுலேந்திரராசா 44 பனிக்கநீராவி, பெரியமடு, புளியங்குளம்

03.சிவகுரு திரவியம் 32 மரையடித்தகுளம், ஓமந்