Tamileelamarchive Tamileelamarchive
வகைகள்
  • வகைகள்
  • அறிக்கை
  • சஞ்சிகைகள்
    • Hot Spring
    • உலக உலா
    • எரிமலை
    • தமிழீழ நோக்கு
    • நாற்று
    • நிர்மாணி
    • வெளிச்சம்
  • தமிழினப்படுகொலைகள்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • அரசியற்துறை
      • ஊடகத்துறை
      • சமாதான செயலகம்
      • சிறார் இல்லங்கள்
      • தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்
      • தமிழீழ காவல்துறை
      • தமிழீழ நீதித்துறை
      • தமிழீழ போக்குவரவு கழகம்
      • மயூரி இல்லம்
      • லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்
    • அனைத்துலகத் தொடர்பகம்
    • தமிழீழ இராணுவம்
      • கடற்புலிகள்
      • கரும்புலிகள்
      • தரைப் படை
      • புலனாய்வுத்துறை
      • மகளீர் படையணி
      • வான்படை
    • தமிழீழ நிதித்துறை
    • தமிழீழ மாவட்டங்கள்
    • மக்கள் நலன் காப்பகங்கள்
  • தமிழ்த் தேசிய நாட்காட்டி
  • தேர்ந்த கட்டுரைகள்
  • நூல்கள்
    • ஆங்கில ஆவணம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • தமிழீழம்
  • பத்திரிகைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
      • விழுதுகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • விடுதலைப்புலிகள்
  • புகைப்படங்கள்
    • அரசியல் சந்திப்புக்கள்
    • தமிழீழ அழகு
    • தமிழ்நாடும் – ஈழத்தமிழ்நாடும்
    • தேசியத் தலைவர்
    • புலம்பெயர்
    • மக்கள் எழுச்சி
  • புதியவரவுகள்
  • போராட்ட வரலாறு
  • மாவீரர் நாள் நிகழ்வுகள்
    • தமிழீழம்
      • மாவீரர் நாள் – 2019 -தமிழீழம்
    • தமிழ்நாடு
      • மாவீரர் நாள் – 2019 – தமிழ்நாடு
    • புலம்பெயர்
      • மாவீரர் நாள் – 2019 -புலம்பெயர் தேசம்
      • மாவீரர் நாள் – 2020-புலம்பெயர் தேசம்
    • மாவீரர் நாள் – 2021 -புலம்பெயர் தேசம்
  • முக்கிய தரவுகள்
Menu
Tamileelamarchive Tamileelamarchive
ஆவண வகைகள்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • தமிழீழ மாவட்டங்கள்
    • தமிழீழ இராணுவம்
    • அரசியற்துறை
    • ஊடகத்துறை
  • புதியவரவுகள்
  • நூல்கள்
    • தமிழீழம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • ஆங்கில ஆவணம்
  • தமிழினப்படுகொலைகள்
    • 1956 – 2008
  • பத்திரிகைகள்
    • விடுதலைப்புலிகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
  • சஞ்சிகைகள்
    • வெளிச்சம்
    • எரிமலை
    • உலக உலா
    • Hot Spring
  • போராட்ட வரலாறு
  • புகைப்படங்கள்
    • தேசியத் தலைவர்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • தமிழீழ மாவட்டங்கள்
    • தமிழீழ இராணுவம்
    • அரசியற்துறை
    • ஊடகத்துறை
  • புதியவரவுகள்
  • நூல்கள்
    • தமிழீழம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • ஆங்கில ஆவணம்
  • தமிழினப்படுகொலைகள்
    • 1956 – 2008
  • பத்திரிகைகள்
    • விடுதலைப்புலிகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
  • சஞ்சிகைகள்
    • வெளிச்சம்
    • எரிமலை
    • உலக உலா
    • Hot Spring
  • போராட்ட வரலாறு
  • புகைப்படங்கள்
    • தேசியத் தலைவர்
முகப்புதமிழினப்படுகொலைகள் குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985
Previous product
வல்வை இனப்படுகொலை 10.05.1985
Back to products
Next product
கிளிவேட்டி படுகொலை 1985 இல்

குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985

வகை தமிழினப்படுகொலைகள்
Share
  • விளக்கம்
விளக்கம்

யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு குமுதினிப்படகுச் சேவையே பெரிதும் உதவியது. இப்படகுச் சேவை நாளாந்தம் காலை 7.00 மணிக்கு நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து குறிகட்டுவானுக்கும் பின்னர் மாலை 5.00 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுத் துறைமுகத்துக்கும் பயணிக்கும்.

1985ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி குமுதினிப் படகு வழமைபோல தனது சேவையை ஆரம்பித்தது. அன்று ஏறக்குறைய அப்படகில் அறுபதிற்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்தார்கள். நெடுந்தீவுத் துறைமுகத்திலிருந்து  குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமயம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினரின் இரண்டு பீரங்கிகள் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் குமுதினிப் படகினை அண்மித்த போது அதில் பயணித்த மக்கள் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவ்விரண்டு விசைப்படகுகளில் கடற்படையினர் தங்களுடன் கோடரி, கத்தி, அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களையும் எடுத்து வந்திருந்தனர். இதைப் பார்த்த மக்கள் செய்வதறியாது கதறி அழுதார்கள். வந்த கடற்படையினர் குமுதினிப் படகினுள் மூன்று மாதக் குழந்தை உட்பட அனைத்துப் பயணிகளையும் ஒவ்வொருவராகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து மற்றவர்கள் அறியாமல் தாங்கள் எடுத்து வந்த கூரிய ஆயதங்களினால் வெட்டிக் கொன்றனர். கடற்படையின் இத் தாக்குதலில் நாற்பத்திரண்டிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.  இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது அங்கங்களை இழந்தார்கள். இவர்கள் அனைவரும் மாலை கரையொதுங்கிய குமுதினிப் படகிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

சம்பவம் தொடர்பாக நெடுந்தீவைச் சேர்ந்த எஸ்.புஸப்ராணி தெரிவிக்கையில்:

“அனுராதபுரத்தில் நடைபெற்ற கொடூரச் சம்பவத்திற்குப் பதிலடியாகவே இக்குமுதினிப் படுகொலை நடைபெற்றது. இதில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் எனது உறவினர் பலர் இறந்துள்ளனர். இச்சம்பவத்தில் நான் வெட்டிக்

காயப்படுத்தப்பட்டேன். கர்ப்பிணித் தாய்மாரைத் தாக்கும்போது வயிற்றிலுள்ள குழந்தை “கொட்டியா” (LTTE) என்று கூறித் தாக்கினார்கள். பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றிப் பலர் தாக்கப்பட்டனர்.”

15.05.1985 அன்று குமுதினிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. பசுபதி நிர்மலாதேவி (வயது 20)
  2. கந்தையா சதாசிவம் (வயது 56 – ஆசிரியர்)
  3. ஜேசுதாசன் (வயது 46 – கடற்தொழில்)
  4. மாரியம்மா
  5. ஆ. கனகலிங்கம் (வயது 34 – கடற்தொழில்)
  6. தில்லைநாதன் (வயது 32 – கடற்தொழில்)
  7. ஞானப்பிரகாசம் மரியமாணிக்கம் (வயது 45 – கடற்தொழில்)
  8. சடையர் கோவிந்தன் (வயது 46 – கடற்தொழில்)
  9. செபமாலை அந்தோனிப்பிள்ளை (வயது 45 – கடற்தொழில்)
  10. செபமாலை கிருஸ்ரி (வயது 24)
  11. நிமிலி (வயது 18)
  12. அனுசியா (வயது 23)
  13. பேர்ணாட்கிறார் பூரணம் (வயது 22)
  14. வெ. கந்தையா (வயது 44 – கடற்தொழில்)
  15. செ. சந்திரகுமார் (வயது 30 – கடற்தொழில்)
  16. தருமலிங்கம் பாபு (வயது 13)
  17. குமாரசாமி விநாயகம் (வயது 38 – கடற்தொழில்)
  18. சபாபதி தெய்வானை (வயது 68 – கடற்தொழில்)
  19. ஞானப்பிரகாசம் தேவசகாயம் (வயது 42 – கடற்தொழில்)
  20. வைத்திலிங்கம் சதாசிவம் (வயது 45 – கடற்தொழில்)
  21. இராமன் முருகன் (வயது 52 – கடற்தொழில்)
  22. கரையூர் சின்னையா (வயது 35 – அரச ஊழியர்)
  23. முத்தன் மணிவண்ணன் (வயது 13)
  24. றொகேசியன் சந்திரகுமார் (வயது 18 – மாணவன்)
  25. தொப்பை நாகேந்திரம் (வயது 23)
  26. சின்னவன் அந்தோனி (வயது 65)
  27. இராமநாதன் (வயது 16)
  28. வேலுப்பிள்ளை புஸ்பராசா (வயது 22)
  29. ஞானசேகரம் (வயது 28 – தபால் அதிபர்)
  30. விசுவலிங்கம் சுபாஜினி (7மாதக் குழந்தை)
  31. கனகம்மா (வயது 55 – கடற்தொழில்)
  32. பழனி மோகநாதன் (வயது 27 – கடற்தொழில்)
  33. தர்மலிங்கம் அமிர்தலிங்கம் (வயது 18)
  34. பசுபதி நிர்மலாதேவி (வயது 19 – மாணவி)
  35. நவசிவாயம் கந்தையா (வயது 45 – இ.போ.ச ஓட்டுநர்)
  36. இராமலிங்கம் பரலோகநாதன் (வயது 35 – கமம்)
  37. கார்த்திகேசு (வயது 45)
  38. க. பார்வதிப்பிள்ளை (வயது 40)
  39. சி.நாகேந்திரன் (வயது 32 – கடற்தொழில்)
  40. குசலகுமாரி (வயது 28)
  41. சாந்தலிங்கம் (வயது 1)
  42. ஞா. சரோஜாதேவி (வயது 24 – ஆசிரியர்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

தொடர்புடைய ஆவணங்கள்

Close

மதவாச்சி – ரம்பாவ படுகொலை – 1984 செப்ரெம்பர்

அனுராதபுர மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக மதவாச்சி அமைந்துள்ளது. வவுனியா நகரிலிருந்து கிட்டத்தட்ட முப்பது கி.மீ தூரத்தில் தெற்கு பக்கமாக யாழ் கண்டி வீதியில் மதவாச்சி நகரம் அமைந்துள்ளது.
Close

திருநெல்வேலிப் படுகொலை – 24,25 யூலை 1983

திருநெல்வேலி யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவினுள் உள்ளடங்கும் பகுதியாகும். யாழ் நகரப் பகுதியிலிருந்து பலாலி வீதியூடாக வடக்குப் புறமாக ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில்
Close

வல்வை இனப்படுகொலை 10.05.1985

வல்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக
Close

திம்பு பேச்சுவார்த்தை கால படுகொலை

1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் பத்தாம் திகதி பூட்டான் நாட்டுத் தலைநகரமான திம்புவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இம் மாதம் வன்முறைகள் நிரம்பிய மாதமாக இருந்தது. இதே மாதம் பதின்நான்காம்
Close

முள்ளியவளைப் படுகொலை – 16.01.1985

முள்ளியவளைக் கிராமம் முல்லை, மருதநிலங்கள் சூழ்ந்த வளங்கொழிக்கும் பிரதேசமாகவும் பாரம்பரிய கலை, பண்பாடு என்பன சிறப்பாகவுள்ள பிரதேசமாகவும் வவுனியா – முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முல்லைத்தீவில் நிலைகொண்டிருந்த
Close

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 10.01.1974

1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு  என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
Close

புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலை – 21.04.1985

  முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே
Close

வட்டக்கண்டல் படுகொலை – 30.01.1985

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் கட்டுக்கரைக்குளக் கரையோரமாக விவசாய நிலப்பரப்புடன் வட்டக்கண்டல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். 1985ஆம்
Useful links
  • Privacy Policy

© 2022 Tamileelamarchive. All rights reserved

  • Menu
  • Categories
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • பத்திரிகைகள்
      • ஈழமுரசு
      • ஈழநாதம்
      • களத்தில்
      • விடுதலைப் புலிகள்
    • சஞ்சிகைகள்
      • எரிமலை
      • உலக உலா
      • Hot Spring
    • போராட்ட வரலாறு
  • படங்கள்
  • தமிழினப்படுகொலைகள்
  • தமிழீழ நடைமுறை அரசு
    • தமிழீழ மாவட்டங்கள்
    • தமிழீழ இராணுவம்
    • அரசியற்துறை
    • ஊடகத்துறை
  • புதியவரவுகள்
  • நூல்கள்
    • தமிழீழம்
    • தமிழர் இலக்கியம்
    • தமிழர் கலைகள்
    • ஆங்கில ஆவணம்
  • தமிழினப்படுகொலைகள்
    • 1956 – 2008
  • பத்திரிகைகள்
    • விடுதலைப்புலிகள்
    • சுதந்திரப்பறவைகள்
    • ஈழநாதம்
    • ஈழமுரசு
    • களத்தில்
  • சஞ்சிகைகள்
    • வெளிச்சம்
    • எரிமலை
    • உலக உலா
    • Hot Spring
  • போராட்ட வரலாறு
  • புகைப்படங்கள்
    • தேசியத் தலைவர்
  • Compare