பாண்டியன் உற்பத்திப் பிரிவு


“பாண்டியன் சுவையூற்று”

 

“பாண்டியன் சுவையூற்று” – கிளிநொச்சி திறந்து வைக்கப்பட்ட நாள் 01.10.2003.

முன்னதாக 28.09.2003 அன்று ஒழுங்குபடுத்தலின் படி தேசியத்தலைவர் அவர்கள் தனது குடும்பத்தினருடன்
திடீர் விஜயம் மேற்கொண்டார். அதன் பொருட்டு அவ்விடமே புனிதமடைந்தது. நமது தேசத்தின் பாலகன் பாலச்சந்திரனும்வ ந்திருந்தார்.

 

 

 


தலைவர் உணவுவகைகளை ஒவ்வொன்றாக சுவை பார்த்தார்.அதன் பின்னாளில் 01.10.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது. சுவையூற்றின் சுவை நினைக்கவே நாவூறும்.

முற்றுமுழுதான கணணி மயப்படுத்தப்பட்ட வன்னியின் முதல் நிறுவனம் இதுதான் என எண்ணுகிறேன்.
01.10.2003 தொடக்கம் 2008 இன் இறுதிவரை இது கிளிநொச்சி மக்களின் பசி போக்கி சுவை தாகம் தீர்த்தது என்றால் மிகையாகாது.

அண்ணனின் எண்ணப்படி தமிழேந்தி அண்ணனின் ஒத்துழைப்புடன் குட்டி அண்ணனின் முயற்சியில்
குறைந்த செலவில் நிறைந்த பயனை மக்கள் பெறவேண்டுமென உருவானதே சுவையூற்று. அதில் குட்டியண்ணன் உறுதியாக இருந்தார். (குட்டியண்ணன் ஈழத்தின் எம் ஜி ஆர்)

அந்த காலத்தில் மக்களின் பொழுது போக்கு மையமாகவும் சந்திப்பிடமாகவும் கூட சுவையூற்று இருந்தது.

 

 

பாண்டியன் உணவகம்

 

தமிழீழ மக்களுக்கு தூய தமிழ் உணவை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும் ஒரு சூழலை வளர்ப்பது மட்டுமல்லாமல், தமிழீழத்தின் பொருளாதார வலிமையை வளர்ப்பதற்கும் தமிழீழ  முழுவதும் உணவகங்கள் நிறுவப்பட்டன. இதனால் தமிழீழ அரசு உணவு மூலம் தமிழ் கலாச்சாரத்தின் வாழ்வாதாரத்தை அனுமதித்தது, அதுவே தமிழ் அடையாளத்தை வலுப்படுத்தவும் அனுமதித்தது.