சேரன் சுவையகம்
தமிழீழத்தில் எமது தனி அரசால் 2009 இருந்த போது கிளிநொச்சியில் பிரபலமான உணவகங்கள் என்றால் அது சேரன் சுவையகமும், பாண்டியன் சுவையூற்றும் தான். தமிழீழ தனி அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழ்ந்த மக்களால் இந்த இரண்டையும் அவ்வளவு எழுதில் மறக்க முடியாது. இந்த இரண்டுமே புலிகளின் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்தவை.
அப்போது ஈழத்தில் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டுமென்ற ஒரு கொள்கை இருந்து வந்தது. இதன் காரணமாக “ஐஸ்கிரீம்” என்பது தூய தமிழில் குளிர் களி என அழைத்தார்கள். கோயில் திருவிழா, விளையாட்டுபோட்டிகள், புலிகளின் கொள்கை பரப்புரை கூட்டங்கள் என அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் இதே போன்று ஒரு வாகனத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வார்கள்.
அங்கே கிடைக்கும் அந்த பத்து ரூபா ஐஸ்கிரீம் சுவை இங்கே எத்தனை ஆயிரம் ரூபா கொடுத்தாலும் கிடைக்காது. அது தான் எம் ஈழத் தாய் நாட்டின் சிறப்பு. இப்போது இவை எதுவும் ஈழத்தில் இல்லை. எல்லாமே சிங்களவனால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டது. ஆனால் இது முடிவல்ல. விரைவில் எம் தாய் நாட்டில் எம் தலைவனின் வழிகாட்டலின் கீழ் இழந்த அனைத்தையும் மீண்டும் கட்டி எழுப்புவோம். அப்போது மீண்டும் இந்த சேரன் சுவையகத்தின் ஐஸ்கிரீம் வாகனங்கள் ஈழமண்ணில் வளம் வரும்.