திருகோணமலை இனக்கலவரம் 12.04.2006


திருகோணமலை நகரில் 2006 ஏப்ரல் 12ஆம் நாள் மாலை இடம்பெற்றகுண்டுவெடிப்புச் சம்பவத்தைஅடுத்து தமிழர்களுக்கு எதிராக சிங்களக் காடையர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதன்போது 10 தமிழ்மக்கள் உட்பட 15பேர் படுகொலை செய்யப் பட்டதுடன் 50பேர் படுகாயமடைந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் காயப்படுத்தப்பட்டதுடன் பெருமளவு வீடுகள், கடைகள், வாகனங்கள் எரித்து அழிக்கப்பட்டன. 1983, 1987ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் திருகோணமலை நகரில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகமோசமான வன்முறையாக இது கருதப்படுகின்றது. 2006 ஏப்ரல் 12ஆம் நாள் மாலை 4மணியளவில் திருகோணமலை நகரிலுள்ள மரக்கறிச் சந்தைப் பகுதியிலுள்ள தேங்காய்க் கடைக்கு முன்பாக குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இச்சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் ஐந்து சிங்களவரும் கொல்லப்பட்டனர்.

 

இதையடுத்தே தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய தாக்குதற் சம்பவங்கள் சிங்களக் காடையர் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் திருகோணமலை நகருக்கு மேலாக பெரும் புகை மூட்டம் காணப்பட்டது. மரக்கறிச் சந்தை, பஸ் நிலையப் பகுதி, மணிக்கூட்டுச் சந்தி, மீன் சந்தை, மத்திய வீதி, வடகரை வீதி, மடத்தடி, புகையிரதச் சந்தி, சிறிமாபுரம் போன்ற பகுதிகளிலும் லிங்கநகர், மட்கோ சந்திப் பகுதிகளிலும் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு, வாள்வெட்டு என்பனவற்றில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 10இற்கும் அதிகமான தமிழர்களும் முஸ்லிம் ஒருவரும் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பு இடம்பெற முன்னரே மூன்றுக்கும் அதிக லொறிகளில் அழைத்து வரப்பட்டிருந்த சிங்களக் காடையர் கும்பல் வடகரை வீதி, மத்திய வீதிப் பகுதிகளிலும் தமிழர்களுக்குச் சொந்தமான ஐந்திற்கும் அதிகமான பாரிய வர்த்தக நிலையங்களை கொள்ளையிட்டதன் பின்னர் தீவைத்து அழித்தனர். சித்திரைப் புதுவருடத்திற்காக துணிமணிகளையும், ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்துகொண்டிருந்த பல தமிழர்கள் இந்தச் சம்பவத்தின்போது அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். நகரில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கடற்படையினர், பொலிசார், இராணுவத்தினர் பெருமளவில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், அவர்கள் வன்முறைகளைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதேவேளை அசம்பாவிதச் சம்பவங்கள் குறித்து திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பிற்கும், ஜனாதிபதிக்கும் உடனடியாகவே அறிவித்துள்ளார்.

 

இச்சம்பவத்திற் கொல்லப்பட்டோர்இச்சம்பவத்தில்

01.வு.மகாலக்சுமி42

02.வு.செல்வகுமார்18

03.ஏ.நந்தேஸ்வரன்28

04.ஏ.வெங்கட்றாமன்30