திருகோணமலை மாவட்டத்தின் புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான திரியாய்க் கிராமம் திருகோணமலையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டு இனக்கலவரத்தினால் பாதிப்படைந்த மக்கள் அகதி முகாம்களிற் தஞ்சமடைந்திருந்தனர். முகாமிற்கு வந்த இராணுவத்தினர் வன்முறைகளால் இடம் பெயர்ந்து வந்திருந்த மக்கள் ஒன்பது பேரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றார்கள். இவ்வாறு கைதுசெய்து கொண்டு செல்லப்பட்ட மக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக கள்ளம்பற்றைச் சந்தியிலிருந்து மீட்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து வந்த தமிழர்கள் ஆவர்.