கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984


கொக்கிளாய் – கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்றன தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்களாகும். இப்பிரதேசங்கள் மீன்பிடிக்குப் புகழ்மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். இம்மக்களும் நல்ல செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.

1984.12.15ஆம் திகதி இராணுவத் சிப்பாய்கள் முல்லைத்தீவு  மாவட்டத்திலுள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, குமுழமுனை, அளம்பில் ஆகிய கிராமங்களுக்குள் நுழைந்து சொத்துக்களை நாசம் செய்ததுடன் மக்களைப் படுகொலையும் செய்தனர்.

இச்சம்பவத்தில் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களை விட்டு இரண்டாயிரம் தமிழ் குடும்பங்கள் கையில் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தனர். இச்சம்பவத்தின்போது இதில் முப்பத்தொரு பெண்கள், இருபத்தொரு குழந்தைகள் உள்ளடங்கலாக நூற்று முப்பத்தொரு பேர் உயிரிழந்தனர்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.