தென்னமரவடி படுகொலை – 03.12.1984.


தென்னமரவடி கிராமத் தலைமை அதிகாரியான (விதானையார்)    திரு. எஸ். வைரமுத்து என்பவர். 1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இருபத்தி நான்காம் திகதி வெளிவந்த சற்றர் ரீ.வ்.யு ஏட்டில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி ஆயுதம் தாங்கிய காடையர் கூட்டம் ஒன்று தென்னமரவடிக் கிராமத்தில் நுழைந்து பெண்கள் உட்பட பதினைந்து பேரை கொன்று அங்கிருந்த நூற்று இருபத்தி ஐந்து குடும்பங்களையும் விரட்டி அடித்து வெளியேற்றினர்.

அதேவேளை அருகில் இருந்த அமரவயல் கிராமத்தில் இவ்வாறு நடந்ததெனக் குறிப்பிட்டிருந்தார். இவ்விரு கிராமங்களும் திருமலை மாவட்டத்தில் வடமுனையில் இருந்தவை. ஆங்கிலேயர் 1824ஆம் ஆண்டு எடுத்த குடித்தொகையின் போது தமிழ் கிராமங்களாக பதிவு செய்யப்பட்டிருந்தன.1984 மார்கழி இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்