சுன்னாகம் காவற்றுறை நிலையப் படுகொலை – 08.01.1984


யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச எல்லைக்குள் சுன்னாகம் அமைந்துள்ளது. யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் கே.கே.எஸ் வீதியில் பத்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள சந்திக்குத் தெற்குப் புறமாக இருநூற்றைம்பது மீற்றர் தூரத்தில் சுன்னாகம் காவற்றுறை நிலையம் அமைந்திருந்தது.

1984ஆம் ஆண்டு தை மாதம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் காரணமின்றிக் கைதுசெய்யப்பட்ட சுன்னாகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுன்னாகக் காவற்றுறை நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.

1984ம் ஆண்டு தை மாதம் எட்டாம் நாள் காவற்றுறை மீது போராளிகளின் எதிர்ப்புக்கள் பரவலடைய சுன்னாகக் காவற்றுறையினர், இளைஞர்களைத் தடுத்து வைத்திருந்த அறையில் நேரக்கணிப்பு குண்டினை பொருத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்கள். காவற்றுறையினர் பொருத்திய குண்டு வெடித்ததில் காவற்றுறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களை காப்பாற்றச் சென்ற சஞ்சீவன் உட்பட பத்தொன்பது இளைஞர்கள் உயிரிழந்தனர்.

 

 

08.01.1984 அன்று சுன்னாகம் காவற்றுறை நிலையப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. செல்லர் சிவலிங்கம் (வயது 22 – மாணவன்)
  2. வைத்திலிங்கம் நிகேதனன் (வயது 21 – மாணவன்)
  3. கந்தையா பாலன் (வயது 25 – கமம்)
  4. அப்பையா நாகராசா (வயது 38 – வியாபாரம்)
  5. ஆசீர்வாதம் விஜிற்விமலராஜா ( வயது 20 – மின்சாரசபை ஊழியர்)

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.