” தமிழீழ கடற்புலிகள் “


  படியுங்கள்


தமிழீழத்தைப் பொறுத்தளவில் , இது மிக மிகப் பிரதானமானது.
எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது.
தமிழீழ நிலப்பகுதிய எங்கள் கடல் மூன்று பக்கங்களில் அரவணைத்தபடி உள்ளது.
பலர் நினைப்பதுபோல எமது பாரம்பரிய வாழிடமான னியாப்பகுதி , மட்டும்தான் , தமிழீழத் தாயகம் அல்ல.
பெருமையும் , பழமையும் , செழுமையும் கொண்ட இந்தக் கடலும் நிலமும் இணைந்தது தான் , எமது தமிழீழத் தாயகம் ஆகும்.
இது எங்கள் கடல்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எமது முன்னோர்களின் சமூக , பொருளாதார வாழ்வோடு இது பின்னிப்பிணைந்து நிற்கிறது.
எமது முன்னோர்களின் கட்டுபரங்களும் , வாணிபக் கப்பல்களும் , போர்ப் படகுகளும் இக்கடலன்னையின் மடியில் தான் தவழ்ந்து திரிந்தன.
தமிழீழக் கடல் , பொருளாதார ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , வெளி உலகவர்த்தகத் தொடர்புகளுக்காகவும் முக்கியம் பெறுகின்றது.
ஆனால் அதைவிட முக்கியமாக , தமிழீழத்தின் பாதுகாப்புக்கு இக்கடல் மிகமிகப் பிரதானமானது.
இக்கடல் எமது கட்டுப்பாட்டில் உள்ளவரை மட்டும்தான் அதனால் வரும் பொருளாதார நன்மைகளையும் , அரசியல் நன்மைகளையும் எமது மக்கள் அனுபவிக்கமுடியும்.

ஆகவே எமது கடல் , எமது தேசத்தின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.
ஆசியாவிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலையைக் கொண்டிருப்பது , எமது கடலின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இது தவிர , கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல துறைமுகங்களையும் , பொருளாதார மையங்களையும் எமது கடல் கொண்டிருக்கிறது.
தமிழீழத் தாயக மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் கருக்கொண்டு ஆரம்பமாகிய முனைய காலத்திலும் சரி , அது முனைப்புற்று வளர்ந்து செல்லப்படும் நிகழ்காலத்திலும் சரி , விடுதலைக்குப் பின் நிருவப்படப்போகின்ர தனியரசு ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு , பொருளாதாரம் , அரசியல் ஆகிய விடயங்களைத் தீர்மானிக்கும் எதிர்காலத்திலும் சரி , எமது கடல் மிகப் பிரதான பங்கு வகித்தது – வகிக்கப்போகின்றது.

இப்படியாகப் பல பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்ற பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள – எங்கள் கடலை , நாம் சிறீலங்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் , தமிழீழக் கடற்பரப்பில் நாம் எதிரியை விடப் பலம் பொருந்தியவர்களாக மிளிர வேண்டும். இந்த யதார்த்த உண்மையை அன்றே புரிந்துகொண்ட எமது ” தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் ” அவர்கள் , பல வருடங்களுக்கு முன்னரையே அதற்க்கு வேண்டிய திட்டங்களைத் தயாரித்து , படிப்படியாக அதற்க்கு நடைமுறை உருவமும் கொடுத்துள்ளார்.
சிங்களப் பேரினவாத அரசிடம் இருந்து எமது தாயகத்தை மீட்டேடுப்பதற்க்கான போராட்டம் என்னும் போது , தமிழீழத் தாயகத்தின் தரை எல்லைகளையும் – கடல் எல்லைகளையும் விடுவிப்பது என்பதையே , அது குறித்து நிற்கிறது.

எனவே , தமிழீழத் தாயகத்தின் ஒரு பகுதியாகிய தரையில் பிரமானடமான வளர்ட்சியுடன் இருக்கும் எமது தரைப்படையைப் போன்று தமிழீழம் தனக்கென்று ஒரு கடற்படையையும் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம்.

எமது மக்களின் சுதந்திர எழுட்சியை உற்று நோக்குவோமானால் , அது புரட்சிகர ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தபின் , எந்த அளவுக்குக் கடலோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது , என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழீழம் , தரைத் தொடரில் தனது எல்லையாக சிறீலங்காவை மட்டுமே கொண்டிருக்கிறது. ஏனைய திசைகளில் கடலிலேயே எமது எல்லைகள் இருக்கின்றன. எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ட்சிக்கட்டத்திலும் , தமிழீழக் கடல் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.
இச்சூழ்நிலையிலேயே 1984 ஆம் ஆண்டு , தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் , விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் படைப் பிரிவுக்கு அதன் வரலாற்றுரீதியான பிறப்பைக் கொடுத்து , ஆரம்பத்தில் அதற்க்கு ” கடற்புலிகள் ” எனப் பெயரும் சூட்டினார்.
ஆரம்பத்தில் கடற்புலி அணியினருக்கு கடல் சம்பந்தமான அறிவு ஊட்டப்பட்டதுடன் , கடற் சண்டைகளுக்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
ஆனால் கடற்புலி அணியினர் எதிரியிடம் வலிந்து சென்று கடற் சண்டைகளில் ஈடுபடுவதைத் தவித்தார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் அந்தந்தக் காலங்களோடு ஒட்டிய தேவைகளை நிறைவு செய்யும் பல பணிகளை , அவர்கள் ஆற்றவேண்டியிருந்தது. கடற்பயணங்கள் போவதற்கும் அவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்க்குமான வேலைகளையே ஆரம்பத்தில் கடற்புலி அணியினர் செய்து வந்தனர்.
எனினும் சிறீலங்கா கடற்படையினரின் போர்ப் படகுகள் மீது , ஆங்காங்கே ஒருசில கடற்கண்ணித் தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளனர்.
1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து 6 வருடங்களாகப் பெரிய அளவிலான கடற் சண்டைகள் எதிலுமே ஈடுபடாதிருந்த கடற்புலி அணியினர் , 1990 ஆம் ஆண்டு திரும்பவும் சிறீலங்கா இராணுவத்துடன் போர் ஆரம்பமாகிய போது , கடற் சண்டைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
இக் கடற்போரிலும் கரும்புலித் தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு , கடற்போர் ஓர் புதிய பரிமாணத்திற்குள் சென்றது.
இந்த வகையில் சிறீலங்காக் கடற்படை மீதான தனது முதலாவது பாரிய தாக்குதலை , 10.07.1990 அன்று வல்வைக்கடலில் வைத்துக் கடற் கரும்புலிகள் மேற்கொண்டனர்.

வெடி மருந்து நிரப்பிய படகொன்றுடன் சென்ற கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன் , கப்டன் கொலின்ஸ் , கப்டன் வினோத் ஆகியோர் சிறீலங்கா கடற்படியின் ஒரு போர்க் கப்பலைச் தேதமாக்கி , இந்த வீரசாதனையைப் படைத்தார்கள்.

இதே போன்று 04.05.1991 அன்றும் வாழ்வைக் கடலில் வைத்துக் கட்டளைக் கப்பலொன்று கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டது. இதுவும் ஒரு கரும்புலி நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கப்டன் சிதம்பரம் , கப்டன் ஜெயந்தன் ஆகியோர் வீரச்சாவை அனைத்துக்கொண்டனர்.
தமிழீழக் கடற்பரப்பில் சுதந்திரமாக உலாவந்த சிங்களக் கடற்படையினருக்கு இவ்விரண்டு கரும்புலி நடவடிக்கைகளும் பீதியைக் கொடுத்திருந்தன. அத்துடன் தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படை வைத்திருந்த கடல் ஏகபோகம் உடைந்து சிதறியது.

தமிழ் மக்களாகிய நாம் ஒரு யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நிலங்களை விடுவிக்கும் அளவிற்கு முன்னேறியபோது , சிறீலங்கா அரசானது கடல் மூலமே தனது படைபலத்தைப் பிரயோகித்து , எமது முன்னேற்றத்தைத் தடுக்க முயன்று வருவதை , நாம் கண்டு வருகின்றோம். அதாவது , தரையுத்தத்தை வெல்ல எதிரி கடலையே பயன்படுத்தி வருகின்றான்.
1987 ஆம் ஆண்டு வடமராட்சியைக் கைப்பற்ற ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” என்ற இராணுவ நடவடிக்கையைச் ச்ங்க்கலப் படைகள் நடாத்திய போதும் , 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாமை நாம் வெற்றிகொள்ள முயன்ற சமயத்திலும் , 1991 ஆம் ஆண்டு சிலாவத்துறை முகாமை நாம் கைப்பற்ற முயன்ற சமயத்திலும் , 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரின்போது எம்மிடம் விழ்ட்சியடையும் நிலையில் இருந்த ஆனையிறவுத் தளத்தைப் பாதுகாக்கும் போதும். சிறீலங்கா அரசு கடல்வழி மூலமே தனது பலத்தைப் பிரயோகித்து எமது முயற்சிகளுக்குக் குறுக்கே நின்றது.
இதற்குப் பிரதான காரணம் எமது கடலில் எதிரி வைத்திருந்த கடல் ஏகபோகம்தான்.
தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் அடிக்கடி கூறுவார் :

” புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே , கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி , எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடல் ஆதிக்கத்தைத் தகர்த்து , எமது கடலில் நாம் பலம் பெறும் போதுதான் , விடுவிக்கப்படும் நிலப்பகுதியை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்வதுடன் , தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படியையும் விரட்டியடிக்க முடியும். ”
ஒரு கடற்படையை நாம் கட்டியெழுப்ப வேண்டுமாயின் , ஏராளமான பொருட் செலவைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும். தரைச் சண்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் , உபகரணங்களின் பெறுமதியைவிடக் கடற் சண்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுத் உபகரணங்களின் பெறுமதி மிக மிக அதிகமாகும். எனவே ஒரு கடற்படையைக் கட்டி வளர்க்கப் பொருளாதார பலமும் தேவை.
தமிழீழத்தைப் பொருத்தவரை வெளியுலகத் தொடர்புகளுக்கும் , போராட்டத்திற்குத் தேவையான விநியோகங்களுக்கும் , அதற்குரிய செயற்பாடுகளுக்கும் கடலே பிரதான வழியாக இருக்கிறது.

எமது தரை எல்லையை (சிறீலங்காவுடனானது ) இதற்க்கு நாம் பயன்படுத்த முடியாது.
எனவே போக்குவரத்து , விநியோகங்கள் , உலகத் தொடர்புகள் யாவுமே கடல்மூலமே உள்ளன.
எனவேதான் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து , கடற்பரப்பில் அவனது நடமாட்டத்தைத் தடுக்க வேண்டியது , மிகமிக அத்தியாவசியமானது. அப்போதுதான் எமது தாயகப் போர் வெற்றிபெற முடியும்.

1984 ஆம் ஆண்டிலிருந்து கடற்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட எமது கடல் அணி , 1991 ஆம் ஆண்டு பிற்பகுதியில் , ” விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ” என்ற புதிய பெயருடன் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இக்காலத்தில் இதன் சிறப்புத் தளபதியாக சூசை அவர்களும் , தளபதியாக கங்கை அமரன் அவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.
இக்காலத்திலேயே சிறீலங்காக் கடற்படையினர் மீது கடலில் வைத்தும் , கடற்கரையோரங்களில் உள்ள காவலரண்கள் மீது , பல வெற்றிகரமான தாக்குதல்களை கடற்புலிகள் நிகழ்த்தினார்.

இத்தொடரான தாக்குதல்களின்போது , கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் சில , பல்வேறு முனைகளிலும் தாக்கி அழிக்கப்பட்டன.
ஆனையிறவுக் கடல்நீரேரியில் வைத்து 41 அடி நீளமான அதிவேகச் சண்டைப் படகொன்று , கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் , நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையுடன் வெற்றிகரமான படகுச் சந்தைகளிலும் கடற்புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
இக் கடற் தாக்குதல்களிலும் – கடற் சண்டைகளிலும் கணிசமான சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

கடற் கண்ணித் தாக்குதல்களை நிகழ்த்துவதில் இருந்து , நவீன மயப்படுத்தப்பட்ட சிங்களக் கடற்படைக்கெதிராக நேரடித் தாக்குதல்களையும் , கடற் சண்டைகளையும் நடத்தக்கூடிய அளவிற்கு விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியினர் பெற்ற வளர்ட்சி , சிறீலங்காவின் படைத்துறைத் தலைமையைத் திணறடித்துள்ளது. இதன் காரணமாக , கடற்படையின் பலத்தை நம்பிப் போராட்டத்தை நசுக்க அவர்கள் உருவாக்கிய நீண்டகால நோக்கிலான போர்முறைத் திட்டமும் கேள்விக் குறியாகிவிட்டது.

அத்துடன் அண்மைக் காலத்திலிருந்து , தமிழீழக் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் மேலாதிக்கம் படிப்படியாகச் சரிந்துகொண்டிருப்பதையும் காணலாம். அதனால் தமிழீழம் மீதான் தனது ஆக்கிரமிப்புப் போர் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்குவதையும் , சிங்கள ஆளும் வர்க்கம் உணரத் தொடங்கியிருக்கும்.

தமிழீழக் கடலன்னை தியாகத்தாலும் , சோகத்தாலும் உருவான ஒரு மகத்தான காவியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறாள்.
எத்தனை இனிய தோழர்கள் …
எவ்வளவு திறமையான கடலோடிகள் ….
மீனுக்கு இணையான நீச்சல்காரர்கள் ..
தியாகத்தின் உயர் வடிவமான கடற் கரும்புலிகள் !

சாவு வரும் என்பதைத் தெரிந்தும் இவர்கள் பயணம் போனார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணம் போனபோது , கரையிலே நின்று கைவீசி அனுப்பிவைத்தோம். ஆனால் நாம் பார்த்துக்கொண்டிருந்த போதே , அந்தப் பரந்த கடலோடு கரைந்து போனவர்கள் பலர்.
தமிழீழக் கடலைன்னியின் மடியிலேயே இரவும் பகலும் கிடந்தது , பணியையும் குளிரையும் , தம்முயிரையும் பாராது கடலோடிய தமிழீழத் தாயின் புதல்வர்களில் எத்தனையோ பேர் , அந்த உப்பு நீருடனேயே சங்கமமானவர்கள்.

இது எங்கள் கடல் ; இது தமிழீழத் தாயகத்தின் இணைபிரியாத ஒரு அங்கம். அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து இது மீட்க்கப்பட வேண்டும். அதற்காகவே கடற்புலிகள் உயிரையும் மதியாது பயணம் பொய் , உன்னதமான தியாகங்களைப் புரிந்து , வீர காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு நாள் , நிட்சயமாக எங்களின் கடற்படைக் கப்பல்கள் எங்களின் கடலில் பவனிவரும் ; அப்போது எங்களின் இளைய பரம்பரையினர் பயமின்றி , சுதந்திரமகா எங்களின் கடலில் உலாவருவார்கள்.

•” கடற்புலிகளின் வளர்ட்சியும் போரில் திருப்புமுனைகளும் “
‘ கடலிலே காவியம் படைப்போம் ‘