“நீலப்புலி” – “மறவர்” விருது.


  படியுங்கள்

வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு “நீலப்புலி” – “மறவர்” விருதுகள் வளங்கி – தேசியத் தலைவரால் மதிபளிப்பு

எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழ் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிபளித்த நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் உட்பட சிறிலங்கா படைய பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஐந்து தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்திய வானோடிகளுக்கு “நீலப்புலி” என்னும் சிறப்பு விருதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மூன்று தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய துணை வானோடிகளுக்கு “மறவர்” விருதையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.