புலனாய்வுப் பிரிவு


தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை (TOSIS) என்பது 1983 இல் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுச் சேவையாகும். இது பொட்டு அம்மானால் தலைமை தாங்கி நடத்தப்பட, இதன் துணைத் தலைவராக கபில் அம்மான் காணப்பட்டார்.

கரும்புலிகளின் தாக்குதல்கள் (தற்கொடையாளர்)உட்பட, தமிழீழ விடுதலைப்புலிகளின் (தமிழீழ அரசின்)எல்லாத் தாக்குதல்களுக்கும் இது கருவியாகச் செயற்பட்டது.

மாத்தையா எனப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘றோ’விற்கு இரகசியங்களை தெரிவித்ததைத் கண்டுபிடித்ததில் மிக முக்கிய பங்காற்றியது. புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிர்வாகிக்க 1988 இல்  தமிழீழத் தேசியத்தலைவர பிரபாகரனால் பொட்டு அம்மான் நியமிக்கப்பட்டார்.